'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி, கமல் உள்ளிட்ட, அனைத்து முன்னணி நடிகர்களுடன் 1990களில், ஜோடி போட்ட மீனா பொண்ணுக்கு, ரீ-என்ட்ரி பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றபடி, மலையாளம், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு முயற்சி எடுத்து வந்த அவருக்கு, மலையாளத்தில் மோகன் லாலுடன் நடித்த, திருஷ்யம் என்ற படம், பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த படம், மலையாள சினிமாவின் வசூல் சாதனையில், புதிய சகாப்தம் படைத்துள்ளதாம். இதனால், இப்போது,மலையாளத்தில் பிரபலமான நடிகையாகி விட்டார் மீனா. மம்முட்டி, பிருத்விராஜ் போன்ற, முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள், அவரை முற்றுகையிட்டுள்ளன. இதனால், மீனாவின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடுகிறது.