ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த நிறைய மலையாள படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு மோகன்லால் டப்பிங் பேசியதில்லை. இப்போது மேஜர் ரவி டைரக்ஷனில் அவர் நடித்த கர்மயோதா படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மோகன்லால் தமிழில் டப்பிங் பேசி உள்ளார்.
தமிழ் படத்துக்கு வெற்றிமாறன் ஐ.பி.எஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மோகன்லாலுடன் சாய்குமார், சோனா, உமா ரியாஸ், சுகுமாரி ஆகியோர் நடித்துள்ளனர்.
மோகன்லால் இந்தப் படத்தில் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இளம் பெண்களை கடத்தும் இண்டர்நேஷனல் நெட் ஒர்க் கும்பலை தனி ஆளாக நின்று போட்டுத்தள்ளும் கதை. கடைசியில் அந்த கும்பல் அவர் வீட்டு பெண்களையே கடத்த மோகன்லால் ஆக்ஷன் கதகளி ஆடித் தீர்ப்பார். பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களை செல்லமாக மட்டும் வளர்த்தால் போதாது பாதுகாப்பாகவும் வளர்க்க வேண்டும் என்கிற மெசேஜையும் சொல்லுகிற படம்.