ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்டு என்கிற நட்ராஜ் இந்தியில் மிக முக்கிய ஒளிப்பதிவாளர். அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு வந்து படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டுப்போவார். கடைசியாக மிளகா என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் சதுரங்க வேட்டை. அவருக்கு ஜோடியாக நடிக்கிறவர் இஷாரா. எச்.வினோத் என்பவர் இயக்குகிறார்.
படத்தின் கதை தடாலடியானது. அதைப் பற்றி டைரக்டர் வினோத் இப்படிக்கூறுகிறார். "இயற்கையோட சமநிலை தவறினால் அழிவு. மனிதனின் சமநிலை தவறும்போது நடப்பது சதுரங்க வேட்டை. பணம் இருந்தா ஹீரோ ஆகலாம், எம்.பி.ஆகலாம், பணம் இருந்தா என்ன வேணாலும் செய்யலாம் என்கிற நிலை இருக்குறப்போ பணம் சம்பாதிக்கவும் என்ன வேணாலும் பண்ணாலுமுன்னு நினைக்கிறவனோட கதை.
நல்லவனா வாழ்ந்தா செத்த பிறகு சொர்க்கத்துக்கு போகலாம். கெட்டவனா வாழ்ந்தா வாழும்போதே சொர்க்கத்துல வாழலாம்னு நினைக்கிற ஹீரோ. கதை தான் டெரரா இருக்குமே தவிர அதை காமெடியத்தான் சொல்றோம். முதன் முறைய படத்தை 6 எபிசோட்களாக பிரித்து வித்தியாசமான ஸ்கிரீன்ப்ளே பண்ணியிருக்கோம் என்கிறார்.