இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபகாலமாக பிரபல ஹீரோக்கள் என்றால் அவர்கள் கண்டிப்பாக பஞ்ச் டயலாக் பேசியாக வேண்டும் என்ற கட்டாயம் நிலவி வருகிறது. படத்துக்குப்படம் இதை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால், கதையில் கவனம் செலுத்துற அளவுக்கு பஞ்ச் டயலாக்கிலும் ஆர்வம் காட்டுகிறார்கள் ஹீரோக்கள்.
ஆனால், இப்படி நம்ம ஹீரோக்கள் பேசிய பஞ்ச் டயலாக்கையே ஒன்றுதிரட்டி தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் ஒரு ஓப்பனிங் பாடல் வைத்துள்ளனர். மலை அண்ணாமலை, என்னா நான் சொல்றது, நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என தமிழ் ஹீரோக்கள் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டயலாக்குகளை கொண்டு இந்த பாடல் முழுக்க எழுதியுள்ளனர்.
அதனால், இந்த பாடலில் செம எனர்ஜியுடன் நடனமாடியுள்ள நானி, ரஜினி டயலாக் வரும்போது ரஜினி பாணி, அஜீத் டயலாக் வரும்போது அஜீத் பாணி என அந்தந்த ஹீரோக்களின் பாணியிலும் நடனமாடி அசத்தியிருக்கிறார். நான்ஈ படத்தில் சாப்ட்டான ரொமாண்டிக் ஹீரோவாக நடித்து தமிழுக்கு அறிமுகமான நானி, இந்த படத்தில் தனது கலக்கலான நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நிரந்தரமான இடத்தை தனக்கு பிடித்துத்தரும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.