டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
5 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசாகி, சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த படம் சுப்பிரமணியபுரம். சசிகுமார் தாயரித்து, இயக்கி, நடித்திருந்தார். ஜெய் அவரது நண்பராகவும், ஸ்வாதி, ஜெய்யின் காதலியாகவும் நடித்திருந்தார். 80களில் மதுரை பகுதியில் இருந்த காதல், ஜாதி, அரசியல் துரோகத்தை பாசாங்கு இல்லாமல் பதிவு செய்த படம்.
இந்தப் படத்தின் திரைக்கதை வடிவம் பெரிதாக பேசப்பட்டது. அதனால் முதலில் அது தமிழில் புத்தகமாக வெளிவந்தது. பின்னர் மலையாளத்தில் வெளிவந்தது. இப்போது ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது.
சுப்பிரமணிபுரத்தின் ஆங்கில திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா புத்தக கண்காட்சி அரங்கில் நடந்தது. டைரக்டர் கவுதம் மேனன் வெளியிட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். விழாவில் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.