ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் ஸ்ருதி, ஐஸ்வர்யா என்ற பெயர் கொண்ட நடிகைகள் ஏராளமாக இருக்கிறார்கள். மோனிகா என்ற பெயரில் அழகி மோனிகா மட்டும் நடித்து வருகிறார். இப்போது அவருக்கு போட்டியாக இன்னொரு மோனிகா வந்திருக்கிறார். கண்ணன் 1 காதலி 2 படத்தில் அறிமுக ஹீரோ பைரவிற்கு ஜோடியாக புது மோனிகாவும், பார்கவியும் நடிக்கிறார்கள்.
காதலிப்பதையே வேலையாக கொண்ட ஹீரோ மோனிகாவிடமும், பார்கவியிடமும் வசமாக மாட்டிக் கொள்கிறார். இருவரும் சேர்ந்து அவருக்கு எப்படி பாடம் நடத்துகிறார்கள் என்பதுதான் கதையாம். ஜெகன் கல்யாணம் மியூசிக் போட்டிருக்கிறார். சாமி-சக்தி ஒளிப்பதிவாளர்கள். ஏ.கோபாலசாமி என்பவர் டைரக்ட் செய்கிறார். ஊட்டி, ஈரோடு, ஆந்திரா பகுதியில் 45 நாளில் படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். அடுத்த மாதம் ரிலீஸ் பண்ணுகிறார்கள். படம் ஹிட்டானால் இந்த மோனிகா காதலி மோனிகா என்ற அழைக்கப்படலாம்.