டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரியங்கா சோப்ரா இந்திப் படங்களில் நடித்து வந்தாலும் அவரது எல்லை இப்போது சர்வதேச அளவில் விரிவடைந்து வருகிறது. டிஷ்னி தயாரிபில் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். உலக புகழ்பெற்ற பாடகர் பிட்புல்லுடன் நிகழ்ச்சி நடத்துகிறார். உலகின் புகழ்பெறற் கெஸ் என்ற பேஷன் ஷோவில் ப்ரியன் ஆண்டர்சுடன் பங்கேற்று வருகிறார். இதன் மூலம் பிரியங்கா சோப்ரா சர்வதேச பேஷன் உலகை கலக்கி வருகிறார். அவரது அழகு உலகை கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச செலிபிரிட்டி பப்ளிசிட்டி பேஷன் ஏஜென்சி அமைப்பு (பிபிஎல்சிடிஒய்) பிரியாங்கா சோப்ராவை உலக அழகிகளில் ஒருவராக தேர்வு செய்திருக்கிறது. இந்த நிறுவனம் உலகில் அழகான பெண்கள் 13 பேரை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இந்த இடத்தை பிடித்திருக்கும் முதல் இந்தியர் பிரியங்காதான். இந்த பட்டியலில் பியான்ஸ் கோவ்லஸ், ஜெனிபர் லாரன்ஸ், அலிக்கா கோர்லஸ், செக்ரலட் ஜான்சன் ஆகிய ஹாலிவுட் நடிகைளும் உள்ளனர்.
"இந்த செய்தி கிடைத்தும் என் வாழ்வின் உச்சகட்ட மகிழ்ச்சியை அடைந்தேன். இந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த இந்திய சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.