டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எஸ்.எஸ்.ஆர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு மாபெரும் திரை ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலாலும், நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஆலயமணி, காஞ்சித் தலைவன், பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ராஜேந்திரனுக்கு தற்போது 86 வயதாகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ராஜேந்திரன்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்காக இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சளி அதிகமாக இருந்ததால் அவரது உடல்நலம் குன்றியுள்ளதாகவும், தற்போது நன்கு குணமடைந்துள்ளதாகவும், இன்னும் இருதினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரனை நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, நடிகை ராதிகா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.