ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரையில் தனது கலைப்பயணத்தை தொடர்ந்த சந்தானம், தமிழ் சினிமாவில் கால்பதித்து, இப்போது நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபடத்தில் சந்தானம் இருந்தார் என்றால் அந்தப்படத்திற்கான போட்ட காசை எடுத்துவிடலாம் என்பது அநேக தயாரிப்பாளர்களின் எண்ணம். அதனால் தான் சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஆண்டு கணக்கில் காத்திருக்கின்றனர் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எல்லாம். முன்னணி நடிகர்கள் படம் என்றாலும் அதில் சந்தானத்தின் காமெடியும் சேர்ந்துவிட்டால் அப்படம் நிச்சயம் வெற்றி. அந்தளவுக்கு அவரது காமெடி கொடி இறக்கை கட்டி பறக்கிறது.
நிற்க கூட நேரமின்றி, தூக்கத்தை கூட மறந்து, ராத்திரி பகல் என்று பாராமல் ஓய்வென்றி நடித்து வரும் சந்தானத்திற்கு இன்று 34வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை ஆடம்பரமாய் எல்லாம் கொண்டாடவில்லை. மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். தனது பெற்றோரிடம் ஆசி பெற்று, பின்னர் சென்னையை அடுத்துள்ள தனது குலதெய்வம் கோயிலான கள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து, பின்னர் ஒவ்வொரு ஆண்டு திருவண்ணாமலை சென்று வழிபடுவதை போல் இந்தாண்டும் திருவண்ணாமலை கிளம்பி சென்று விட்டார். சந்தானத்தின் 34வது பிறந்தநாளையொட்டி அவரது அபிமானிகள் ஏராளமானபேர் சென்னை முழுக்க வாழ்த்து போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.