Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமெரிக்கன் ஹஸ்ல்(ஆங்கிலம்)விமர்சனம்

21 ஜன, 2014 - 06:52 IST
எழுத்தின் அளவு:

மூ ன்று,'கோல்டன் குளோப்' விருது களைப் பெற்று, ஆஸ்கர் விருதுக்கான பந்தயத்தில் குதித்துள்ள படமிது. கறை படிந்த அரசியல்வாதிகளை பிடிக்க உதவும், தகிடுதத் ஜோடி. கடைசியில் தடுமாறிப் போகும் அமெரிக்க காவல் துறை.இர்விங் ரோஸன் பெல்ட் (கிறிஸ்டியல் பேல்), சின்ன வயதிலிருந்தே, சட்டத்தை மதிக்காதவன். சின்ன வயதில், அப்பாவின் கண்ணாடி கடையின் வியாபாரம் பெருக, ஊரில் உள்ள கண்ணாடிகளை, கல்லெறிந்து உடைத்தவன். தன் ஒரே பாச மகனுக்காக, அலுப்பூட்டும் தாம்பத்திய வாழ்க்கையை, மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவன். அவன் வாழ்க்கையில், உண்மையான காதலுடன் வருகிறாள், சிட்னி பிராசர் (ஏமி ஆதம்ஸ்). மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சிட்னியை, லண்டன் பணக்காரியாக வேடம் போட வைத்து, தில்லாலங்கடி வேலைகளை அரங்கேற்றுகிறான், இர்விங். ஆனால், அவனை கண்ணி வைத்து பிடிக்கிறார், அமெரிக்க காவல் துறை அதிகாரி ரிச்சி டிமாஸோ (பிராட்லி கூப்பர்). விடுதலைக்கு ரிச்சி போடும் நிபந்தனை என்ன தெரியுமா? பெரிய மீன்களை பிடிக்க இர்விங் உதவ வேண்டும்.


கறைபடிந்த அரசியல்வாதிகளையும், அமெரிக்காவின் மாபியா கும்பலையும் பிடிப்பது தான், அவன் திட்டம். ஆனால், இர்விங்கும், சிட்னியும், அவனையே பலிகடா ஆக்கி, தப்பிப்பது தான், படத்தின் ஹைலைட். சப் - டைட்டில்களுடன் கதையை தெளிவாக சொல்கின்றனர். 'இங்கு நான் பொய்களை விற்கிறேன். ஏனென்றால், இது என் அலுவலகம்' என்பது போன்ற, வித்தியாசமான வசனங்கள், படத்தின் கல கலப்பை கூட்டுகின்றன. ஏமி ஆதம்ஸின் கவர்ச்சியும், நடிப்பும், பார்வையாளர்களை, இருக்கையை விட்டு எழுந்து விடாமல் கட்டிப் போடுகின்றன. பிராட்லி கூப்பர், துாள் கிளப்பியுள்ளார். ஜெனிபர் லாரன்ஸ், ஒரு முட்டாள் மனைவியை, கண் முன் நிறுத்துகிறார். அமெரிக்காவின் அரசியல் அவலங்கள், தோலுரித்து காட்டப்படுவது, பாராட்டப்பட வேண்டிய விஷயம். (இங்கே அப்படி படம் எடுத்தால், எந்த தியேட்டரிலும் படம் வெளியாகாது) மகனுக்கும், மனைவிக்கும் நடுவில், காதலில் தவிக்கும், இர்விங் பாத்திரத்தில், கிறிஸ்டியன் பேல், செமத்தியாக ஸ்கோர் செய்துள்ளார்.மொத்தத்தில், இந்திய பார்வையாளர்களுக்கு, இந்த படம்,


ஒரு வித்தியாசமான அனுபவம்.


ரசிகன் குரல்:நம்ம ஊர் படங்களில் பார்க்க முடியாத காட்சிகளும் வசனங்களும் இந்த படத்தில் தாரளமா இருக்கு.அதுக்காகவே பார்க்கணும் பாஸ்!


திரை தீர்ப்பு:கிளாசிக்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in