மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வழக்கு எண் 18/9 படத்தில் ஆர்த்தி என்ற பிளஸ் 2 மாணவி வேடத்தில் நடித்தவர் மனீஷா யாதவ். அதையடுத்து, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது, பட்டய கிளப்பு பாண்டியா என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களும், அவருக்கு ஒப்பந்தமாகியுள்ளன. மனீஷா யாதவுக்கு, காதல் கதைகள் மீது தான், அதிக ஆர்வம் போலிருக்கிறது. காதல் கதைகள் என்றால் மட்டுமே, காது கொடுத்து கேட்கிறாராம். அது குறித்து அவரை கேட்ட போது, காதல் எல்லாரையும் போலவே எனக்கும், ரொம்ப பிடித்தமான விஷயம். அதுவும், இப்போது நான் புதுவரவு நடிகை. இந்த நேரத்தில். என் வயதுக்கேற்ற இளமையான வேடங்கள்தான் ஒர்க் அவுட்டாகும் என்கிறார்.