ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா ஜோடி சேர்ந்ததையே பலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தநிலையில், அவர்கள் இருவருக்குமுள்ள கெமிஸ்ட்ரி பற்றி வெளியான செய்திகளால பலர் பொறாமையில் தீய்ந்தே போய் விட்டனர். ஆனால் அவர்களெல்லாம் இன்னும் நொந்து நூலாகிப் போய்விடும் அளவுக்கு இப்போது இன்னொரு ஜிலீர் அனுபவத்தை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
அதாகப்பட்டது, மான்கராத்தேயில் ரொமான்ஸ் காட்சிகளில் நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னுடன் இயல்பாகவும், நெருக்கமாகவும் நடித்து திக்குமுக்காட வைத்த ஹன்சிகா, சண்டிகரில் நடைபெற்ற பாடல் காட்சிகளில் இன்னும் என்னை திணறடித்து விட்டார். சூரியனையே கண்ணால் பார்க்க முடியாத அந்த மைனஸ் டிகிரி சீதோஷ்ணத்தில் இருவரும் ஒரு கிக்கான பாடலில் நடித்தோம்.
அப்பாடலில் மீண்டும் கிளாமருக்கு மாறியுள்ள ஹன்சிகா, தனது கிளாமரை வாரி வழங்கும் வகையிலான காஸ்டியூம்களை அணிந்து நடித்துள்ளார். அந்த குளிரில் எங்களுக்கிடையிலான அந்நியோன்யம் இன்னும் அதிகரித்தது. பாடல் காட்சியை பார்த்தாலே பத்திக்கொள்ளும் அளவுக்கு அனல் பறக்க படமாகியுள்ளது.
அவருடன் நடித்த அந்த அனுபவம், சண்டிகரில் மைனஸ் டிகிரி என்பதையே என்னை மறக்கடித்து விட்டது. அந்த அளவுக்கு ஒரு இதமான சுகமான சீதோஷ்ணத்தை உணர்ந்தேன் என்று தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது இந்த சுகமான அனுபவங்களை கேட்கும் மேற்படி நடிகர்கள், தாங்களும் சிவகார்த்திகேயனின் அனுபவங்களை உணர வேண்டும் என்பதற்காக அவருக்கு போட்டா போட்டியில் சிபாரிசு செய்யத் தொடங்கியுள்ளனர்.