தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 2ந் தேதி லாஸ் ஏஞ்ஜெல்சில் நடக்கிறது. இப்போது இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படங்கள்
சிறந்த படத்துக்கான போட்டியில் முதல் இடத்தில் இருக்கிறது கிராவிட்டி. ஜார்ஜ் க்ளூனி, சான்ட்ரா புல்லக் நடித்த படம். இந்தப் படம் 10 பிரிவுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அமெரிக்கன் ஹசில் என்ற படமும் 10 பிரிவிற்கு பரிந்துரை செய்யப்பட்டள்ளது. இதில் கிறிஸ்டியன் பேல், பிராட்லீ ஹூப்பர் நடித்துள்ளனர். 12 இயர்ஸ் எ ஸ்லேவ் என்ற படம் 9 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிவிட்டல் எஜியோபர், மைக்கேல் பாஸ்பெண்டர் நடித்துள்ள படம்.
சிறந்த இயக்குனர்கள்
இந்த மூன்று படங்களின் இயக்குனர்களும் சிறந்த இயக்குனர்களுக்கா பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அல்போன்ஸா குவாரோன் (கிராவிட்டி), ரஸல் (அமெரிக்கன் ஹசில்), ஸ்டீவ் மெக்வின் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்). இவர்கள் தவிர நெப்ரஸ்கா படத்தை இயக்கிய அலெக்சாண்டர் பேன், தி வுல்ப் வால் ஸ்ட்ரீட் பட இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸஸ் ஆகியோரும் சிறந்த இயக்குனர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நடிகர்-நடிகைகள்
கிறிஸ்டியன் பேல், ப்ரூஸ் டென், சிவிட்ல் எஜியோஃபோர். மேத்யூ மெக் கனோகோ, லியனார்டோ டி கார்பியோ ஆகியோர் சிறந்த நடிகர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். எமி ஆடம்ஸ், கேட் பிளாங்கட், ஜுடி டெஞ்ச், மெரீல் ஸ்ட்ரீப், சாண்ட்ரா புல்லக், ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருது போட்டியில் இருக்கிறார்கள்.
இதில் நடிகர்களில் லியார்னோ டி காப்ரியோவும். நடிகைளில் சாண்ட்ரா புல்லக்கும் விருது வெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல படங்களில் கிராவிட்டிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா இல்லை
இது தவிர 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு படங்களின் பிரிவில் இந்தியாவில் இருந்து ஒன்றிரண்டு படங்கள் கலந்து கொள்ளும், இந்த ஆண்டு இந்திய படங்களோ, இந்திய கலைஞர்களோ ஒரு பிரிவின்கீழ்கூட பரிந்துரைக்கப்படவில்லை.