சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஏராளமான படங்களில் கேரக்டர் நடிகையாக வலம்வந்தவர் லட்சுமிராமகிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு ஆரோகணம் என்றொரு படத்தை இயக்கினார். சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் அப்படத்தில் பிரதான கதாபாத்திரததில் நடித்திருந்தார். ஆனால், நல்ல படம் என்று கருத்து நிலவியபோது கமர்சியல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
அதனால், இனி குடும்ப பிரச்னை என்பதில் இருந்து விடுபட்டு, நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை படமாக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் லட்சுமிராமகிருஷ்ணன். தற்போது ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படம்கூட பாலியல் பலாத்காரத்தை மையப்படுத்திய கதையில்தான் உருவாகியிருக்கிறது.
தற்போதைக்கு இது சூடான விவகாரம் என்பதால், கமர்சியல் ரீதியாகவும் ஒர்க்அவுட் ஆகும் என்பதால், இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு கதையை அடுத்து படமாக்கப்போகிறாராம் லட்சுமி. அதோடு, அதில் முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்தால்தான் பெரிய அளவில் படத்தை வியாபாரம் செய்ய முடியும் என்பதால், ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி வைத்துக்கொண்டு சில முன்னணி நடிகர்களிடம் கால்சீட் கேட்டு வரும் லட்சுமிராமகிருஷ்ணன், மற்ற பெண் இயக்குனர்களைப்போல் இல்லாமல், ஆண் இயக்குனர்களைப்போன்று இந்த படத்தை இயக்கிய சிறந்த கமர்சியல் இயக்குனர் என்ற பெயரையும் உருவாக்கப்போகிறாராம்.