'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1975ம் ஆண்டு வெளிவந்த படம் ஷோலே. இந்தியாவில் அதிக நாள் ஓடிய படம் என்ற சாதனையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமமாலினி. சஞ்சீவ் குமார், ஜெயபாரதி, அம்ஜத்கான் என அன்றைய பிரபல நட்சதிரங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஆர்.டி.பர்மன் இசை அமைத்திருந்தார். ஜி.பி. சிப்பி தயாரிக்க, ரமேஷ் சிப்பி டைரக்ட் செய்திருந்தார்.
இந்தப் படத்தை 38 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் மற்றும் 3டி டெக்னிக்கில் ரீகிரியேஷன் செய்தார்கள். இதற்காக 20 கோடி ரூபாய் செலவானது. ஷோலே 3டி ரிலீசாகி இதுவரை 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 50 கோடி வரை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. ஒரிஜினல் ஷோலே 4 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது என்பதும் அப்போது 50 கோடிக்குமேல் வசூலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.