'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இது ஹீரோயின்கள் பாட்டு பாடும் சீசன். அதுவும் மலையாள ஹீரோயின்கள் தங்கள் மொழியில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம் என தாங்கள் நடிக்கும் மொழியில் எல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இசை அமைப்பாளர்களும் அவர்களை பாட வைப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவதும் ஒரு காரணம்.
இப்போது 100 டிகிரி செல்சியஸ் என்ற மலையாளப் படத்தில் நான்கு ஹீரோயின்கள் இணைந்து ஒரே பாடலை பாடி சாதனை படைத்திருக்கிறார்கள். மிதுன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பாமா, அனன்யா, ஸ்வேதா மேனன், மேக்னாராஜ் என நான்கு ஹீரோயின்கள். அவர்கள்தான் ஒரே பாடலை பாடி உள்ளனர்.
இந்த சாதனை பற்றி படத்தின் டைரக்டர் ராகேஷ் கோபன் கூறியிருப்பதாவது: படத்தோட இசை அமைப்பாளர் கோபிசந்தர் ஒரு அருமையான டியூன் போட்டிருந்தார். கதைப்படி இது படத்தில் வரும் நான்கு ஹீரோயின்களும் பாட வேண்டிய பாடல். அவர்களையே பாட வைத்தால் என்ன என்ற யோசனை வந்தது. அனன்யாவும், பாமாவும் பாடகிகள்தான் அவர்கள் ஓகே. ஸ்வேதாவுக்கும், மேக்னாவுக்கும் பாடி பழக்கம் இல்லை. அதனால் தனியாக பயிற்சி கொடுத்து பாட வைத்தோம். பாட்டு சூப்பராக வந்திருக்கிறது. என்கிறார் ராகேஷ்.