தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் ரொம்ப நாளாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. சில நடிகர்கள் தங்களுக்கு தாங்களே அந்த படத்தை சூட்டிக்கொணடு வருவதும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சில மேல்தட்டு ஹீரோக்கள் அந்த பட்டத்தை தாங்கள் கைப்பற்றி விட வேண்டும் என்று தங்களை சுற்றியிருப்பவர்களை வைத்தே கோரசாக குரல் எழுப்பியும் வருகிறார்கள. அப்படி தளபதி நடிகர் தனது பட விழாக்களில் பெரிய பில்டப்பே கொடுத்து வந்தார். ஆனால் தலைவா சறுக்கலுக்கு பின்னர் ஜில்லாவில் நிமர்ந்துள்ளார்.
அதேசமயம், தல நடிகரோ, தொடர்ந்து கொடுத்த 2 ஹிட் படங்களால் தலைநிமிர்ந்து நிற்கிறார். இந்த சூழலை பயன்படுத்தி அவருக்கு அந்த பட்டத்தை சூட்டிவிட நினைக்கிறார்கள் அவரது அபிமானிகள். ஆனபோதும, நடிகர்தரப்பில் எந்த ரியாக்சனும் இல்லை. சூப்பர் நடிகர் களத்தில் நின்று கொண்டிருக்குபோதே அவரது பட்டத்துக்கு அடித்துக்கொண்டால் தவறாக நினைப்பாரோ? என்று தற்போதைக்கு தல அடக்கிவாசிப்பதாகவும் கூறப்படுகிறது.