விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ஜீவாவை என்றென்றும் புன்னகை படத்தின் வெற்றி, ஓரளவு தலைநிமிர வைத்திருக்கிறது. ஒருவேளை இந்த படமும் ஊத்திக்கொண்டால் அதன்பிறகு ரெஸ்டாரெண்ட் நடத்த சென்று விடுவேன் என்று அந்த படத்தில் நடிக்கும்போது கூறிவந்த ஜீவா, படம் ஓரளவு காப்பாற்றிய காரணத்தினாலே ரெஸ்டாரண்டு யோசனையை தற்காலிகமாக தள்ளி வைத்தார்.
இந்நிலையில், இனி தான் நடிக்கிற படங்கள் கமர்சியல் ரீதியாக கண்டிப்பாக ஹிட்டாக வேண்டும் என்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறார் ஜீவா. அதன்காரணமாக, தற்போது யான் படத்தில் நடித்து வரும் அவர், புதிய படத்திற்கான கதை கேட்பதிலும் தீவிரமடைந்திருக்கிறார். ஆனால், அப்படி கதை கேட்பவர், தன்னுடன் நடிப்பது கண்டிப்பாக முன்னணி கதாநாயகிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறாராம்.
அவரது பட்டியலில் ஹன்சிகா தொடங்கி காஜல்அகர்வாலின் பெயர் வரை இடம்பெறுகிறதாம். இப்படி திடீரென்று பரபரப்பான நடிகைங்களை கேட்டு கண்டிசன் போட்டு விட்டதால், அவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிய டைரக்டர்களும், படாதிபதிகளும் முன்னணி நடிகைகளின் பின்னால் கால்சீட்டுக்காக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் எந்த நடிகையிடமிருந்தும் கிரீன் சிக்னல் விழவில்லையாம்.