'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
தமிழ் சினிமாவில் இப்போது அதிகம் கவனிக்கப்படும் அறிமுகம் லாவண்யா திரிவேதி. உத்ராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லாவண்யா 2011ம் ஆண்டில் மிஸ்.உத்ரகாண்டாக செலக்ட் ஆனவுடன் சினிமா கண்களுக்கு தெரிய ஆரம்பித்தார். இந்தி படத்தில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோதே தெலுங்கிற்கு அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள். இவர் நடித்த அந்தால ராட்சஸி சூப்பர் ஹிட்டாக. லாவண்யா பிசியாகிவிட்டார்.
தமன்னா மாதிரி வடக்கும், தெற்கும் கலந்த முக அமைப்பு அனைவருக்கும் பிடித்துப்போக தமன்னா கால்ஷீட் கிடைக்காதவர்கள் லாவண்யா பக்கம் ஒதுங்க ஆரம்பித்தார்கள். அப்படித்தான் பரமன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இப்போது சசிகுமாருடன் சுவிஸ் குளிரில் ஆட்டம்போட்டு திரும்பியிருக்கும் லாவண்யா அடுத்து விஷ்ணு சிவன் டைக்ட் செய்யும் நானும் ரவுடிதான் படத்தில் கவுதம் கார்த்திக்குக்கு ஜோடி போடுகிறார். தமன்னாவை மனதில் வைத்துக் கொண்டு கதை உருவாக்கி வைத்திருக்கும் டைரக்டர்கள் எல்லாம் இப்போது லாவண்யாவை நோக்கித் திரும்பி இருக்கிறார்கள். தமன்னா கவனமாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.