பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை டைரக்ட் செய்த ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் 6 வருடங்களுக்கு பிறகு தற்போது டைரக்ட் செய்துள்ள படம் கோலிசோடா. படம் டைரக்ட் செய்ய யாருமே வாய்ப்பு கொடுக்காததால் தானே இந்தப் படத்தை சொந்தமாக தயாரித்தார். படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த டைரக்டர் லிங்குசாமிக்கு படம் பிடித்துப்போக இப்போது திருப்பதி பிரதர்ஸ் படத்தை வாங்கிவிட்டது. படத்தை நல்ல விலைக்கு விற்று விட்டதால் சந்தோஷத்தில் இருக்கும் வி.மில்டன் தனது கேமரா அசிஸ்டெண்டுகள் 4 பேருக்கும், உதவி இயக்குனர்கள் 4 பேருக்கும் தங்க சங்கிலியை பரிசாக வழங்கி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: கோலி சோடாவுக்குள் ஒரு விஷயம் இருக்கு. அமைதியா வச்சிருந்தீங்கன்னா தாகம் தீர்க்க உதவும். அதையே ரொம்ப பிரஷர் கொடுத்தீங்கன்னா வெடிச்சு சிதறிடும். படத்துல வர்ற நான்கு பசங்களும் அப்படித்தான். கோயம்பேடு மார்க்கெட்டுல கிடைகிற வேலை செஞ்சு வாழுற பசங்க, அவுங்கள போயி டார்ச்சர் பண்ணினா என்னாகும்றதுதான் கதை.
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு அடையாளம் வேணும். கோயம்பேடு மார்க்கெட்டு எனக்கு தெரிஞ்சு ஒரு 5 ஆயிரம் பேராவது எந்த அடையாளமும் இல்லாம இருக்காங்க. வேலை செய்றது, சாப்புடுறது, தூங்குறது இதை தவிர அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதிலேருந்து நான்கு பசங்கள எடுத்து கதை சொல்றேன்.
கோயம்பேடு மார்க்கெட்டுல பல மாசம் தங்கியிருந்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அங்கேயே படபிடிப்பு நடந்துச்சு. நாலஞ்சு கேமராவை ஆங்காங்கே மறைத்து வச்சு. ஷ¨ட்டிங் நடத்தினேன். சினிமா ஷ¨ட்டிங் நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. நீங்க அடிக்கடி கோயம்பேடு மார்க்கெட் போறவங்களா இருந்தா இந்தப் படத்துல நீங்களும் வரலாம்.
ரொம்ப யதார்த்தமான ஆர்ட் படமும் கிடையாது, ஒரு குத்து சாங், ஒரு பார் சாங். கொஞ்சம் லவ்வுன்னு கமர்ஷியல் படமும் கிடையாது. இதை தாண்டி மூன்றாவது வகையா இந்தப் படத்தை எடுத்திருக்கேன். இதுக்கு பிறகு எனக்கு நல்ல இயக்குனர்ங்ற அடையாளம் கிடைக்கும்னு நம்புறேன். என்கிறார் விஜய் மில்டன்.