பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பார்லிமென்ட் தேர்தல் வரப்போகிறது என்பதால், தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய நடிகர்-நடிகைகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பிரபல கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த நமீதா எந்த கட்சியில் இணையலாம் என்பதை தான் பரிசீலித்து வருவதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையே டில்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் பலமாக காலூன்றும் முயற்சியாக சில முக்கிய நடிகர்களுக்கு தூண்டில் போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷால், ஆம் ஆத்மி கட்சியில் இணையப்போவதாக செய்திகள் பரவின. ஆனால் அவரோ, அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். நானாவது கட்சியில் சேருவதாவது என்று அந்த செய்தி மறுத்தார்.
அவரைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தின் முக்கிய நடிகரான விஜய், ஆம் ஆத்மியில் இணையப்போவதாக புதிய செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. அவரும் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சி போன்று உருவாக்கி வருவதோடு, அவ்வப்போது நலத்திட்ட உதவிகளும் செய்து வருவதால், அந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதாகவே பலரும் கருதினர்.
ஆனால் இதுபற்றி விஜய்யைக்கேட்டால், எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணமில்லை,. நான் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக பரவிய செய்தி வெறும் வதந்தியே என்று அதற்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.