‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அதர்வா நடித்துக் கொண்டிருக்கும் படம் கணிதன். வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். டி.என்.சந்தோஷ் டைரக்ட் செய்கிறார். அரவிந்த் கிருஷ்ணா கேமரா மேன். டிரம்ஸ் சிவமணி இசை. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கேத்ரின் டிரேசா நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து விட்டது.
கணிதன் என்றால் கணக்கு பார்ப்பவனாம். வீரத்துடன் இருக்கிறவனை வீரன் என்று அழைக்கிற மாதிரி கணக்கு பண்ணி வாழ்கிறவனை கணிதன் என்று அழைக்கிறார்களாம். அதர்வா எதையும் திட்டமிட்டு கணக்கா செய்கிறவர். அவரது கணக்கும் ஒரு இடத்தில் தப்பாகிறது. பிறகு அதனை எப்படி சரி செய்கிறார் என்பதுதான் கதையாம். அடுத்த கட்ட ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கிறது. படத்தில் கே.பாக்யராஜ், நரேன், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படப்போகிற ஆக்ஷன் கதையாம்.