இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முழுக்க முழுக்க ஈழத் தமிழர்கள் இணைந்து உருவாக்கும் படம் யாழ். முழு படத்தின் படப்பிடிப்பும் இலங்கையில் நடந்துள்ளது. காதாபாத்திரங்கள் அனைத்தும் ஈழத்தில் வாழ்கிறவர்கள். வினோத், சசி ஹீரோக்கள், லீமா, மிஷா ஹீரோயின்கள். படத்துக்கு இசை அமைத்திருப்பவர்கள், பாடல் எழுதியிருப்பவர்கள், பாடி இருப்பவர்கள் அனைருமே ஈழத்து மக்கள்.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான எம்.எஸ்.ஆனந்த் கூறியதாவது: யாழ் என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்டது. அந்த இசைக் கருவியைக் கொண்டு தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வளர்த்தவர்கள் பாணர்கள். இந்த இரண்டையும் சேர்த்துதான் யாழ்ப்பாணம் என்ற பெயர் உருவானது. இப்போது இரண்டுமே மறைந்து விட்டது. அதனை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. அதோடு சமீபத்தில் நடந்த இறுதிப் போரில் பூத்த ஒரு காதலையும் சொல்கிறோம். இது எங்கள் மண்ணின் கலாச்சாரம் மற்றும் வேதனையின் பதிவு என்கிறார்.