தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொங்கல் தினத்தில் விஜய்யின் போக்கிரியும், அஜீத்தின் ஆழ்வாரும் வெளியாகின. அதையடுத்து இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவும், அஜீத்தின் வீரமும் நேருக்குநேர் மோதியுள்ளன. இரண்டு படங்களுமே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,. விஜய்யின் ஜில்லா படம் அதிக நீளமாக இருப்பதாக ரசிகர்கள் வட்டாரத்தில இருந்து கருத்துக்கள் எழுந்தன.
அதனால், 3 மணி நேரம் 12 நிமிடம் இருந்த படத்தின் நீளத்திலிருந்து 10 நிமிடத்தை அவசர அவசரமாக கத்தரித்தார்கள். ஆனால், அப்படி கத்தரிக்கப்பட்ட காட்சிகளோடு, எப்ப மாமா ட்ரீட்டு என்ற பாடலும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. ஆனால், அப்பாடல் பெருவாரியான விஜய் ரசிகர்களின் விருப்ப பாடலாகி விட்டதால், ரசிகர் மன்றத்தை தொடர்பு கொண்டு அந்த பாடலை அவசியம் படத்தில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம். அப்பாடலில் விஜய்யின் நடனம் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் ரசிகர்கள் தரப்பில் இருந்து கருத்து தெரிவித்துளளார்களாம்.
அதையடுத்து, இப்போது அந்த பாடலை மீண்டும் ஜில்லாவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இந்த சேதி விஜய் ரசிகர்கள் தரப்பில் வெளியானதையடுத்து, எப்ப மாமா ட்ரீட்டு பாடல் படத்தில் இடம்பெற்றால், அது விஜய் எங்களுக்கு ட்ரீட்டு வைத்தது போன்று மகிழ்வோம் என்றும் ரசிகர்கள் உற்சாகம் பொங்க கூறிவருகிறார்கள்.