ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கஜினி, சாமி உள்பட தமிழில் ஹிட்டான பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருப்பதைத் தொடர்ந்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் இந்தி ரீமேக்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள வீரம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாம்.
பொங்கலுக்கு வெளியான வீரம், ஜில்லா படங்களில் அஜீத்தின் வீரம் ஹிட்டடித்திருப்பதால் அப்படத்தின் வசூலை கேள்விப்பட்ட சில பாலிவுட் படாதிபதிகள் அதன் இந்தி உரிமத்துக்காக பேசிக்கொண்டிருக்கிறார்களாம். அப்படி கேட்பவர்கள், அதை இயக்கவும் வீரம் படத்தை இயக்கிய சிவாவையே கேட்டுக்கொண்டு வருகிறார்களாம்.
இந்தியில் இருந்து தேடி வருகிற வாய்ப்பு என்பதோடு, தான் இயக்கிய படம் என்பதால் அதை இன்னும் பிரமாண்டமாக இயக்கலாம் என்று நினைக்கும் இயக்குனர் சிவா, இந்தியில் வீரத்தை ரீமேக் செய்வது பற்றி இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லையாம். இருப்பினும், உடனடியாக அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்கயிருந்தவர் அதை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறாராம். அதனால் அடுத்து வீரம் இந்தி ரீமேக்கையே சிவா இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக