ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'என்றென்றும் புன்னகை படம், ஓரளவுக்கு ஓடியதால், தனக்கு புதிய படம் கமிட்டாகும் என்று எதிர்பார்த்தார், த்ரிஷா. ஆனால், எந்த வாய்ப்பும் இல்லை. அதனால், தற்போது, கன்னட சினிமாவில் கால் பதித்துள்ள த்ரிஷா, அங்கு முழு வீச்சில் புதிய படங்களை கைப்பற்ற களமிறங்கியுள்ளார். இந்த நேரத்தில், த்ரிஷா முக்கியமான வேடத்தில் நடிக்கும், பெயரிடப்படாத படமொன்றின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதனால், த்ரிஷாவுக்கு தமிழ் சினிமா மீது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. காரணம், நயன்தாரா நடித்துள்ள, அனாமிகா படம் போன்று, இப்படத்தில் த்ரிஷாவை மையப்படுத்தியே கதையோட்டம் செல்கிறதாம். அதனால், இந்த படம் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் தன்னைத் தேடி வரும் என்று, புதிய உற்சாகத்தில் உள்ளார் த்ரிஷா.