Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடல் கெளதம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்! - மனம் திறக்கும் லட்சுமிமேனன்

13 ஜன, 2014 - 18:18 IST
எழுத்தின் அளவு:

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் விக்ரம்பிரபுவைத் தொடர்ந்து, சசிகுமார், விஷால், சித்தார்த் ஆகியோருடன் நடித்தவர் இப்போது விமல், கடல் கெளதம் உள்பட மேலும் சில ஹீரோக்களுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடத்தில், இந்த படங்களின் ஹீரோக்களுடன் நடித்த அனுபவத்தைப்பற்றிக் கேட்டால், நான் நடித்த எல்லா படங்களிலுமே ஹீரோக்கள் என்னைவிட அதிக வயதானவர்கள். அதனால் யாரையும் எனக்கு பிடித்தமானவர்கள் என்று சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைத்ததால் அவர்களுடன் நடித்தேன். அப்போது பேசிப்பழகினேன் அவ்வளவுதான் என்கிறார்.

ஆனால், அப்படி நான் நடித்தவர்களில் பிடித்தமான ஹீரோ ஒரேயொருவர் மட்டுமே இருக்கிறார். அவர்தான் கடல் கெளதம். நாங்கள் இருவரும் சிப்பாய் படத்தில் நடித்திருக்கிறோம். கெளதமும் என்னைப்போலவே டீன்ஏஜ் பையன். அதனால், நாங்கள் ரொம்ப ஜாலியாக பேசிக்கொள்வோம். அதிக நேரம் மனம் விட்டு பேசுவோம். அதனால் நான் நடித்த ஹீரோக்களில் கெளதமுடன் மட்டும்தான் நெருங்கி பழகியிருக்கிறேன்.

மேலும், நாங்கள் வெவ்வேறு படங்களில நடித்துகொண்டிருந்தபோதும், அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம். அந்தவகையில், நான் பழகியது வரைக்கும் கெளதம் ரொம்ப நல்ல நடிகர். பெரிய நடிகரின் மகன் என்கிற ஈகோ இல்லாதவர். இயல்பாக பழகக்கூடியவர். அவருடன் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்படி கெளதமைப்பற்றி கலகலப்பாக எடுத்து விடுகிறார் லட்சுமிமேனன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in