தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிசியோதரபி மருத்துவரை கஞ்சா கருப்பு 27ம் தேதி கைப்பிடித்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டையில் கஞ்சாகருப்பு திருமணம் கோலகலமாக நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையில் உள்ள கஞ்சாகருப்பின் குலதெய்வம் கோவிலில், அவர்களது திருமணம் நடைபெற்றது.
குலதெய்வம் கோவிலில் திருமணம் நிறைவடைந்த கையோடு, சிவகங்கையில் உள்ள சத்யசீமான் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பில் தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவும், இயக்குநர் மற்றும் நடிகரான அமீரும் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.
ஜீவன் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வாழ்த்தி கஞ்சா கருப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இவர்கள் தவிர, நடிகைகள் ஷகீலா, கும்தாஜ் ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிரிப்பு நடிகர்கள், சிங்கமுத்து, சுப்புராஜ், விஜயகணேஷ், போன்டாமணி, சின்ராசு, சிஸ்சர் மனோகரன், கிரேன் மனோகரன் உள்ளிட்டோரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்