ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலித்து வருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அவர் விளக்கமாக கூறியது இது-,
"மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா சிப்பா ஒரு பெண்ணை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கனுங்கற கனவுல திரிவேன். அப்பதான் ஹன்சிகாவை கண்டுபிடித்து வெறித்தனமாக காதலிக்க ஆரம்பிக்கிறேன். அவுங்க நாயை விட கேவலமா விரட்டி விரட்டி விடுவாங்க. ஆனால நான் விட மாட்டேன். அதைவிட கேவலமான ஐடியா போட்டு அவுங்கள எப்படி இம்ப்ரஸ் பண்றேங்றதுதான் கதை. கடுமையான உழைப்பும் முயற்சியும் இருந்தா மொக்க பசங்களால கூட ஹன்சிகா மாதிரி அழகு பெண்களை காதலிக்க முடியும்னு தன்னம்பிக்கை கொடுக்குற படம் தான் மான் கராத்தே.
மீசையெல்லாம் எடுத்துட்டு கொஞ்சம் மார்டன் லுக்குல நடிச்சிருக்கேன். கதைப்படி ஹன்சிகாவுக்கு எல்லா விளையாட்டு மேலேயும் ஆர்வம். ஆனா ஒரு விளையாட்டுகூட விளையாடத் தெரியாது. இந்த வீக்னசை கரெக்டா புடிச்சிக்கிட்டு எப்படி அவங்களோ மனசுல பட்டா போட்டு குடிபோறேன்றதுதாங்க கதை" என்கிறார் சிவகார்த்திகேயன்