'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, கார்த்தி என இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாடுவதைப்போலவே தெலுங்கிலும் இளவட்ட ஹீரோக்களின் படங்களாக நடித்து வருகிறார் காஜல்அகர்வால். அப்படி அவர்களுடன் நடிக்கும்போதே நட்பை மானாவாரியாக வளர்த்து விடுவதால், அதன்பிறகு தாங்கள் நடிக்கும் படங்களுக்கு முன்னணி நாயகிகள் யாரும் கிடைக்கவில்லை என்றால் ஏற்கனவே காஜலுடன் டூயட் பாடிய ஹீரோக்கள், காஜலிடம் நேரடியாக பேசி தங்கள் படங்களில் கோர்த்து விடுகிறார்களாம்.
இது தொடர்ந்து நடப்பதால்தான் அவ்வப்போது காஜலின் மார்க்கெட் தொய்வடைகிறபோது, யாராவது இளவட்ட ஹீரோக்கள் கைகொடுத்து காஜலின் மார்க்கெட் கவிழாத அளவுக்கு காப்பாற்றி விடுகிறார்களாம். அதனால்தான் தனது அபிமானத்திற்குரிய இளவட்ட ஹீரோக்களுக்கு எப்போதுமே தனது இதயத்தில் தனி இடம் கொடுத்து வைத்திருக்கும் காஜல்அகர்வால், அவர்களுடன் நடிக்கிற படமே இல்லையென்றாலும், அவ்வப்போது நட்பு ரீதியாக சந்தித்து தொடர்பிலேயே இருக்கிறார்.
இதை தனது சினிமா நண்பர்களிடம் வெளிப்படையாக கூறிவரும் காஜல், இப்படி பல யூத் ஹீரோக்களின் பேவரிட் ஹீரோயினியாக இருப்பதினால்தான் இந்த சினிமா உலகில் இத்தனை ஆண்டுகளாக என்னால் தாக்குப்பிடிக்க முடிகிறது. ஆக, எனக்கு தெரிந்த வரை டைரக்டர், தயாரிப்பாளர்களின் அணுக்கிரகம் இருக்கிறதோ இல்லையோ ஹீரோக்களின் அரவணைப்பு மிக மிக முக்கியம் என்கிறாராம்.