தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முதன் முதலாக சசிகுமார் மார்டன் டிரஸ் போட்டு மும்பை ஹீரோயினோடு சுவிட்சர்லாந்து பனி மலைகளில் பிரம்மன் படத்துக்காக ஆட்டம்போட்டு திரும்பியிருக்கிறார். சுப்பிரணியபுரத்தில் இருந்து குட்டிப்புலி வரைக்கும் வந்த சசி வேறு இந்த படத்தின் சசி வேறு. அவரே சொல்றதை படிங்க.
"பிரம்மன்னா படைக்கிறவன்னு அர்த்தம். பேமிலி செண்டிமெண்ட், பிரண்ட்ஷிப், காமெடி, சின்ன மெசேஜ்னு என் படத்துல இருக்கிற எல்லா விஷயமும் இதுல இருக்கும். ஆனா வித்தியாசமா இருக்கும்.
சும்மா மீசையை முறுக்கிக்கிட்டு மதுரை பக்கம் அரிவாளை தூக்கிகிட்டு திரியுறவனா எத்தனை படத்துல நடிக்கிறது. நான் ஆளே அப்படித்தான்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. கொடைக்கானல் இண்டர்நேஷனல் ஸகூல்ல படிச்சவன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க. அதான் இப்படி ஒரு படம் பண்ண முடிவு பண்ணினேன். மும்பையில போயி ஹீரோயின் புடிச்சேன். சுவிட்சர்லாந்து போயி டூயட்டை முடிச்சேன். சும்மா மதுரை சந்துக்களை சுத்திட்டிருந்தா அடுத்த லெவலுக்கு எப்போ போறது. அதான் சுவிட்சர்லாந்து ரோட்ல ஆடிட்டு வந்திருக்கேன்.
இதனால நம்ம வீட்டு பையன்ங்ற இமேஜ் போயிடும்னு சிலர் பயமுறுத்தினாங்க. ஏன் நம்ம வீட்டு பையன் நல்ல டிரஸ் போடக்கூடாதா, சிவப்பா ஒரு பொண்ணை லவ் பண்ணக்கூடாதா-? அதை ரசிக்கிற மாதிரி, இதையும் ரசிப்பாங்க. படம் வந்ததும் பாருங்க இந்த சசிக்குள் இப்படி ஒரு சசியான்னு ஆச்சர்யப்படுவீங்க" என்கிறார்.