இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் டீசர் வெளியிட்ட ஜில்லா படக்குழு நேற்று முன்தினம் தான் படத்தின் டிரையிலரையே ரிலீஸ் செய்தது. மேலும் போதிய தியேட்டர் கிடைக்கவில்லை, அரசாங்கம் டார்ச்சர் கொடுக்கும் என ரிலீசுக்கு முன்பு ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பியது. இதற்கிடையில் கடைசி நேர டென்ஷனாக ஒருத்தர் ஜில்லா தலைப்பு என்னோடது என்று கூறி படத்துக்கு தடை கேட்டார். 500 ரூபாய் கட்டி கில்டில் தலைப்பை ரிஜிஸ்டர் பண்ணி வைத்துவிட்டு 50 கோடி செலவுல எடுத்த படத்துக்கு தடை கேட்டதால் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். நல்ல வேளையாக கோர்ட் அந்த வழக்கை தள்ளபடி செய்து விட்டது.
சேலையூரைச் சேர்ந்த சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற நிறுவனம்தான் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தது. நீதிபதி ஆர்.ராஜா முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கிற்கு போதிய முகாந்திரம் இல்லை. பெயர் பிரச்னை குறித்து ஏன் முன்னமே வழக்கு தொடரவில்லை என்று கேட்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் எந்த பிரச்னையும் இன்றி ஜில்லா, இன்று தில்லாக உலகம் முழுக்க ரிலீசாகிவிட்டது.