பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை மம்தா மோகன்தாஸ் சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் தாக்கியிருப்பதை உணர்ந்தார். முறையான சிகிச்சை பெற்ற மம்தா, பின்னர் குணமாகி விட்டதாக சொல்லி, மீண்டும் சினிமாவில் பிரவேசித்தார். ஆனால், சில ஆண்டுகளில் மறுபடியும் புற்றுநோய் தாக்கம் தென்பட்டதால், இரண்டாவது முறையாகவும் சிகிச்சை பெற்ற மம்தா, தற்போது பூரண குணமடைந்து விட்டாராம். அதையடுத்து, மலையாளத்தில், புதிதாக சில படங்களிலும் ஒப்பந்தமாகிஉள்ளார். புற்றுநோயை முழுமையாக வென்று விட்டேன். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையே முடிந்து விட்டதாக, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முறையான சிகிச்சை பெற்றால், முழுமையாக குணமடைந்து விடலாம் என, நம்பிக்கை விதையையும், அவர் விதைத்துள்ளார்.