கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
சிந்து சமவெளியில் கவர்ச்சி நடிகையாக அவதரித்த அமலா பாலின் இமேஜை மைனா படம் மாற்றி அமைத்தது. அதன் பின், நாகரிகமான கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தன், தாய்மொழியான மலையாள படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, இதுவரை இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க விருப்பம் தெரிவித்து வந்தார். இப்போது வயதான ஹீரோக்கள் மட்டுமின்றி, குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்து, தன் ரூட்டை மாற்றியுள்ளார்.
அமலா பால் கூறுகையில், இளமையான வேடங்களில் நடித்தாலும், குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும்போது, நான் நடிப்பில் முழுமை பெற்றதாக உணர்கிறேன். மோகன் லால், மம்முட்டி போன்றவர்களுடன் நடிக்கும்போது, எனது நடிப்பு திறமை இன்னும் நன்றாக வெளிப்படுவதாக திருப்தி கொள்கிறேன் என்கிறார்.