ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வடிவேலு இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். ரீ-என்ட்ரியில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று வைராக்கியமாக இருந்து நடித்து வரும் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் கவனமாக நடித்து வருகிறார் வடிவேலு. ஆரம்பத்தில் அவருக்கும், இயக்குனர் யுவராஜ்க்குமிடையே சில சலசலப்புகள் ஏற்பட்டு, அதன்காரணமாக பல கேமராமேன்கள் மாற்றப்பட்டபோதும், பின்னர் பிரச்னைகளை சுமூகமாக தீர்த்து வைத்தனர். ஆக, தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது தெனாலிராமன் படம்.
இந்த நிலையில், பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்குவது கோடம்பாக்கத்தின் பேஷனாகி விட்டதால், வடிவேலு-மீனாட்சி சேஷாத்ரி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்க சீனா செல்கிறார்களாம். அதோடு, சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளையும் அங்குதான் படமாக்கப்போகிறார்களாம். மேலும், தமிழகத்திலுள்ள தென்மாவட்டங்களில் செட் அமைத்து படமாக்கியவர்கள், சீனாவில் முழுக்க முழுக்க இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாக தேடிப்பிடித்து படம் பிடிக்கிறார்களாம். குறிப்பாக, வடிவேலு-மீனாட்சியின் காதல் விளையாட்டுகளை எல்லாம் சீனாவில்தான் கிளுகிளுப்பாக கேமரா கண்களால் பதிவு செய்யப்போகிறார்களாம்.