Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிகர்-நடிகைகளின் விவாகரத்து எதிரொலி! திருமணத்தை வெறுக்கும் கங்கனா ரணாவத்!!

08 ஜன, 2014 - 17:34 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில்தான் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. இப்படியே தனி மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன் என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் தெரிவித்திருந்தார். அவரையடுத்து, இப்போது இன்னொரு பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்தும் தனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்த இவர், பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்கிறார். இவர் நாயகியாக நடித்த க்யூன் என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தற்போது 26 வயதாகும் கங்கனாவிடம் திருமணம் குறித்து மீடியாக்கள் கேட்டதற்கு, என் வாழ்வில் அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இதுவரை தனி மனுஷியாக இருந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இதனால் நான் சந்தோசமாக இருப்பதோடு, எல்லா விசயங்களையும் சுயமாக முடிவெடுக்கிறேன். இந்த வாழ்க்கைதான் எனக்குப்பிடித்திருக்கிறது. என்னை இன்னொருவர் வழி நடத்துவதை நான் எப்போதுமே விரும்பியதில்லை. அதனால்தான் திருமணம் செய்வதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை.

ஒருவேளை அப்படி நடந்தால், குடும்ப சுமை மட்டுமின்றி, பிரச்னைகளுக்கும் வாய்ப்பிருக்கும். அதோடு, திருமணம் செய்து கொண்ட பல நடிகர்-நடிகைகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்களின் திருமணம் இரண்டொரு ஆண்டுகளிலேயே விவாகாரத்தில்தான் முடிந்திருக்கிறது. அதுமட்டுமின்றி அதன்பிறகு உளச்சலிலேயே அவர்கள் வாழ வேண்டும்.

என்வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்னைகள் வரவே கூடாது என்று நினைக்கிறேன். அதனால்தான் திருமணம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.இப்படியே பிரச்னை இல்லாத, நிம்மதியான வாழ்க்கையை வாழவே ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் கங்கனா ரணாவத்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in