ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கிய படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை கமல்தான் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அந்த ராசியோ என்னவோ இப்போது படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்து விட்டது.
அதனால், சமீபத்தில் 100 நாள் விழாவை அமோகமாக கொண்டாடினார் முருகதாஸ். அதோடு, அந்த விழாவுக்கும் கமலை வரவழைத்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள், அப்போது பேசிய கமல், சினிமாவில் நான் கதாநாயகனாக அறிமுகமானபோது காதல் இளவரசன் என்று எனக்கு பட்டம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் உலக நாயகன் என்று அழைத்தனர். ஆனபோதும், அந்த காதல் இளவரசன் பட்டத்தை இன்னும் நான் யாருக்கும் கொடுக்கவில்லை. என்னிடமே அது உள்ளது.
அதனால் இந்த படத்திலிருந்து அந்த பட்டத்தை நான் ஆர்யாவுக்கு கொடுக்கிறேன் என்றார். இந்த பட்டம் எனக்கு எப்படி பொருத்தமாக இருந்ததோ, அதேபோல் ஆர்யாவுக்கும் மிக பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி மேடையிலேயே அதை அறிவித்தார். இதனால் இத்தனை நாளும் திரைக்குப்பினால் மட்டுமே காதல் இளவரசனாக இருந்த ஆர்யா, இனிமேல் கமலின் ஆசீர்வாதத்தோடு திரையிலும் காதல் இளவரசனாக்க மின்னப்போகிறார்.