ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெய், நஸ்ரியா நடிப்பில் புதுமுக இயக்குனர் அனீஸ் இயக்கத்தில், ஆஸ்கர் பில்ம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விரைவில் வெளிவர உள்ள படம் 'திருமணம் எனும் நிக்காஹ்'. இந்த படத்தில் இந்து, இஸ்லாம் கலாச்சார பதிவுகளை பதிவு செய்துள்ளனர். இதற்காக ஒரிஜனலாக மொகரம் பண்டிகை நிகழ்வுகளை கோழிக்கோடு, ஒடிசா, சென்னை போன்ற
பல்வேறு இடங்களில் படம் பிடித்துள்ளனர். அதேபோல் ஆவணி அவிட்டம் எனும் நிகழ்வை, சென்னை திருவல்லிக்கேணி, மாம்பலம் போன்ற இடங்களில் படம் பிடித்துள்ளனர். சமூக பிரச்னைகளை சொல்வதோடு, கலாச்சார பதிவுகளாக அவர்களின் உடைகள், திருமண சம்பிரதாயங்கள், சடங்குகள் உள்ளிட்ட கோலங்கள் தொடங்கி கொண்டாட்டங்கள் வரை திருமணம் எனும் நிக்காஹ் படம் சொல்லபோகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்தியுள்ளதாக கூறுகிறார் இயக்குநர் அனீஸ்.