தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் ஹிட் அடித்த சாப்பாகுரிசு தமிழில் புலிவால் என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது. சாப்பாகுரிசின் மலையாள தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபனும், ராதிகா சரத்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடி. இந்த மாத இறுதியில் ரிலீசாகிறது. படத்தை பற்றி அதன் இயக்குனர் ஜி.மாரிமுத்து கூறியதாவது: இது மலையாள ரீமேக் என்றாலும் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு ஸ்கிரீன்ப்ளேவை முற்றிலுமாக மாற்றி விட்டேன். மலையாளத்தில் ஆர்ட் பிலிம் மாதிரி படம் ரொம்ப சீரியசாக போகும். தமிழில் 5 பாட்டு, நாலு பைட்டு, ஒரு சேசிங்குன்னு பிரமாண்டப் படுத்தியிருக்கோம். தம்பி ராமையா, சூரி காமினேஷனில் புது காமெடி டிராக்கை புகுத்தியிருக்கோம்.
கோடீஸ்வரரான பிரசன்னாவின் செல்போன், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைபார்க்கும் விமலின் கையில் கிடைக்கிறது. அந்த செல்போனில் பிரசன்னாவின் பல ரகசியங்கள் இருக்கிறது. இதை அறிந்து கொள்ளும் விமல், பிரசன்னாவை கொண்டு தன் காரியங்களை சாதித்துக் கொள்கிறார். அந்த காரியங்களை செய்து கொடுத்துக்கொண்டே விமலை அடையாளம் காண துடிக்கிறார் பிரசன்னா. அப்படி அடையாளம் கண்ட பிறகு என்ன என்பது பிற்பகுதி கதை. படம் முழுக்க ஒரு சேசிங் மூட் இருந்துக்கிட்டே இருக்கும். விமலுக்கும், பிரசன்னாவுக்கும் பவர்புல் கேரக்டர். இருவருக்குமே சம வாய்ப்பு இருக்கிறது என்றார்.