‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கோ படத்தில் நடித்தபோது பரபரப்பாக பேசப்பட்டவர் மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. அப்படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் சூடு பிடித்து விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்த கார்த்திகா, நல்ல ஹைட் வெயிட் என ஒரு கதாநாயகிக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்டவராக இருந்ததால் தாய் எட்டடி என்றால் மகள் பதினாறு அடி பாய்வார் என்றுதான் கோலிவுட் அபிமானிகள் கார்த்திகாவின் பாய்ச்சலை காண ஆவலுடன் இருந்தனர்.
ஆனால், அதற்கடுத்து, வித்தியாசமான கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு தன்னை முற்றுகையிட்ட பல படங்களை தவிர்த்து விட்ட கார்த்திகா, பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் மட்டும் கமிட்டானார். டைட்டில் வேடம் என்பதால், இதற்கு பிறகு பாரதிராஜா அறிமுகம் செய்த ராதிகா, ரேவதி, ராதா, ரஞ்சிதா வரிசையில் தானும் கோடம்பாக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகி விடுவோம் என்று கிராமத்தில் ஆடுமேய்க்கும் பெண்ணாகவே மாறி நடித்திருந்தார் கார்த்திகா.
அவரது துரதிர்ஷ்டம் அந்த படம் ஓடவில்லை. இதனால், அடுத்தபடியாக கார்த்திகாவை கண்டுகொள்வாரில்லை. டீல் என்ற படம் மட்டுமே கிடைத்தது. அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டே புதிய படங்களுக்கு வலைவீசி வந்தவர், இப்போது புறம்போக்கு படத்தில் கமிட்டாகி விட்டார். இதனால் டீல் படமும் ஓடவில்லை என்றால், அடுத்து சினிமாவை விட்டே வெளியேற வேண்டியதான் என்று நினைத்திருந்த கார்த்திகாவுக்கு புறம்போக்கு படத்தில் ஆக்சன் வேடம் கிடைத்திருப்பதால், அவரது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு கூடியிருக்கிறது.
இதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, நயன்தாரா பாணியில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களை அதிரடியாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். கூடவே சினிமாவை கரைத்து குடித்த அனுபவம் கொண்ட தாய்குலத்தின் ஆலோசனையும் இருப்பதால், புறம்போக்கு வெளியாவதற்குள் அரை டஜன் படங்களையாவது கைப்பற்றி விட வேண்டும் என்று புதுக்கணக்குப்போட்டுக்கொண்டு கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார் கார்த்திகா.