பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் பவர்புல் நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இந்த மாதிரியான வேடங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் எந்தமாதிரியான சர்ச்சைக்குரிய வேடங்கள் என்றாலும் துணிச்சலாக நடிக்கக்கூடியவர் என்ற பெயருடன் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் அவர், தெலுங்கு படங்களிலும் இடையிடையே நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது ராம்சரணுடன் ஏவடு என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார். அப்படம் திரைக்கு வர தயாராகிவிட்டது. அதற்கடுத்து ரேஸ்குராம் என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜனவரி 5ம் ஸ்ருதிக்கு திடீரென்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் மருத்துவர்கள் அவருக்கு அபன்டிசிட்டிஸ் ஆபரேஷன் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை இதுபோன்று வயிற்று வலி வந்துள்ளதால் ஸ்ருதிஹாசனுக்கு அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு அபன்டிசிட்டிஸ் ஆபரேஷன் செய்யப்பட்டது. டாக்டர்கள், 10 நாட்களுக்கு ஓய்வு எடுக்க சொல்லி ஸ்ருதியை அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் இரண்டொரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார்.
ஸ்ருதியை அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக, அவரது அம்மா சரிகாவும், தங்கை அக்ஷராவும் ஐதராபாத் விரைந்துள்ளார்களாம். இதனால், ஸ்ருதிஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு, இந்தி படங்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.