ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத், நாயகனாக நடித்துள்ள, வீரம் படத்தில், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில், தமன்னா தான் ஹீரோயின் என்றாலும், எந்தவித முக்கியத்துவமும் இல்லாத வேடத்தில், அவர் நடித்திருப்பதாக, பரபரப்பாக செய்திகள் வெளியாயின. ஆனால், படத்தின் இயக்குனர், இதற்கு அளித்துள்ள விளக்கத்தில், ஒப்புக்கு சப்பாணியாக, தமன்னாவை, இந்த படத்தில் பயன்படுத்தவில்லை. இந்தப் படத்தில், தமன்னாவை, மிக முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால், கதையின் முதுகெலும்பே தமன்னாதான். இதற்கு முன், தமிழ் படங்களில் நடிக்காத அளவுக்கு, இந்த படத்தில் நல்லதொரு வேடத்தில் நடித்துள்ளார். அஜீத், தமன்னா கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்கிறார். படம் வந்தால் தெரிந்து விடும், தமன்னாவின் கேரக்டர், உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது தானா அல்லது வழக்கமான டூயட் பாடும், ஹீரோயின் வேடமா என்பது என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.