ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ரீமேக் பட இயக்குனர் ஆர்.கண்ணன், கண்டேன் காதலை, சேட்டை என்ற ரீமேக் படங்களை இயக்கினார். ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் படங்கள் சொந்த கதை. இப்போது மீண்டும் ஒரு சொந்த கதையை இயக்குகிறார். இந்த படத்துக்கு சக்கரை என்று டைட்டில் வைத்திருக்கிறார். விமல் ஹீரோ, ப்ரியா ஆனந்த் ஹீரோயின்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: "படத்தோட கதை ரொம்ப ஸ்வீட்டா இருக்கும். அதான் படத்துக்கு சக்கரை என்ற டைட்டில் வச்சிருக்கேன். கதையை கேட்டதுமே குளோபல் எண்டர்டெயின்மெண்ட் மைக்கேல் ராயப்பன் சார் தயாரிக்க ஒப்புக் கொண்டார். மதுரைதான் கதை களம். விமல் கிராமத்து பெரிய குடும்பத்து பையன், ப்ரியா ஆனந்த் மதுரையில் படிக்கிற பொண்ணு, காதல், மோதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த வில்லேஜ் கமர்ஷியல் படம்" என்றார்.