விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில் நடித்தவர் தீக்ஷாசேத். அனுஷ்கா போன்று நல்ல உயரமான பர்ஷனாலிட்டி கொண்டவராக இருந்ததால், அனுஷ்கா இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் தீக்ஷா. ஆனால், அந்த படம் ப்ளாப் ஆனதால் அதன்பிறகு தீக்ஷாவை கோடம்பாக்கம் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், தற்போது சிம்பு - ஹன்சிகா நடித்து வரும் வேட்டை மன்னன் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார் தீக்ஷாசேத்.
இந்த படத்தில் கதைப்படி சிம்புவுக்கு தீக்ஷாசேத் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளதாம். அதுவும் உதட்டோடு உதடு பதித்து கொடுக்கும் அழுத்தமான முத்தமாம். முதலில் உதட்டு முத்தம் என்றதும் தயங்கி நின்றாராம் தீக்ஷா. அதையடுத்து, படத்தின் இன்னொரு நாயகியும், சிம்புவின் காதலியுமான ஹன்சிகா முன்வந்து, கதைக்கு அவசியம் என்கிறபோது நடிப்பதில் தவறேதுமில்லை என்று தீக்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதன்பிறகே, தனது தயக்கத்தை தள்ளி வைத்து விட்டு, சிம்புவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க முன்வந்தாராம். இந்த முத்தக்காட்சியில் சிம்பு-தீக்ஷாசேத் இருவரும் நடித்தபோது, ஹன்சிகாவும் அதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாராம்.