ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் கொக்கி படத்தில் அறிமுகமான பூஜா காந்தி அடுத்து திருவண்ணாமலை படத்தில் நடித்தார். அதன் பிறகு கன்னடத்திற்கு சென்று விட்டார். அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சியாகவும், காண்டரவர்சி கேரக்டரிலும் நடித்து கன்னட தேசத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் தேர்தலில் நின்று டெபாசிட்டையும் இழந்து வந்தார். கடைசியாக தண்டுபால்யா என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார். இந்த படம் கரிமேடு என்ற பெயரில் தமிழிலும் ரிலீசானது.
இப்போது பூஜா நடித்து வரும் அபிநேத்திரி என்ற படம் ஒரு நடிகையின் வாழ்க்கை கதை என்கிறார்கள். இதுபற்றி பூஜா கூறியிருப்பதாவது: இரு ஒரு நடிகையின் கதைதான். ஆனால் எந்த நடிகை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரும்பாலான நடிகைகளின் இன்னொரு வாழ்க்கை இந்தப் படத்தில் வருவது போன்றுதான் இருக்கும். சிலர் என் வாழ்க்கை கதை என்கிறார்கள். அதுவும் இல்லை. படத்தில் வரும் சில சம்பவங்கள் என் வாழக்கையிலும் நடந்திருக்கிறது. அதுல் குல்கர்னியுடன் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சிகள் பற்றி சர்ச்சை கிளப்புகிறார்கள். அப்படி நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. அது பற்றி ஆராய வேண்டியது தனிக்கை குழுதானே தவிர தனிநபர்கள் அல்ல. என்கிறார் பூஜா.