டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரன்பீர் கபூரும், கத்ரினா கைபும் அரைகுறை பிகினி உடையில் போட்ட காம களியாட்டங்கள் இணையதளத்தில் படங்களாக வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் அடுத்து வந்திருக்கிறது உதய் சோப்ரா, நர்கீஸ் பக்கிரி படங்கள்.
இருவரும் நீண்ட நாட்களாக ஜோடியாக திரிந்து கொண்டிருந்தார்கள். எந்த விழாவாக, இருந்தாலும் ஜோடியாக கைகோர்த்து வந்தார்கள். கேட்டால் "நாங்க ரொம்ப திக் பிரண்டாக்கும் அம்புட்டுதான்" என்றார்கள். அதையும் மக்கள் நம்பினார்கள். இப்போது இரண்டு பேரும் புத்தாண்டை சீனிக் மாலத்தீவில் தனியாக கொண்டாடி இருக்கிறார்கள். நர்கீஸ் கர்ச்சீப்பை விட குறைவான பிகினி டிரஸ்சில் இருக்க அவரது அருகில் உதய் சோப்ரா டவுசர் போட்டு நிற்கிறார்.
இருவரும் நண்பர்கள்தான் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இருவரும் சேர்ந்து ஆளுக்கொரு பல்பு கொடுத்து விட்டார்கள். இருவரும் நெருக்க்க்க்கமான லவ்வர்ஸ் என்பது இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு நர்கீஸ் உதய்க்கு அனுப்பிய டுவிட்டில் "உன் எதிர்கால மகனின் தந்தையும், என் எதிர்கால மகனின் தந்தையும் ஒரே ஆள்தான்" என்று சொல்லி இருந்தார். அதன் முழு அர்த்தம் இப்போதுதான் புரிந்திருக்கிறது.