ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அந்நியனுக்குப்பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ஐ. இந்த படத்துக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக உழைத்து வந்த விக்ரம், தற்போதுதான் அந்த மேக்கப்பை கலைத்து விட்டு, புதிய படங்களுக்காக கதை கேட்கிறார். அதில் ஏற்கனவே அவரை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய தரணி இயக்கும் ராஸ்கல் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், தாண்டவம், ராஜபாட்டை உள்பட சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக இப்போது ரொம்பவே உஷாராகி விட்டார் விக்ரம். எந்த கதையையும் எடுத்தோம் கவுத்தோம் என்று முடிவு செய்யக்கூடாது என்ற நிலைக்கு வந்திருக்கிறார். குறிப்பாக, அவர் சில நாட்களாக நடித்த கரிகாலன் படமும் கிடப்பில் போடப்பட்டதால், இனி அதுபோன்ற பிரச்னைகள் தனக்கு ஏற்படக்கூடாது என்றும் கவனமாக செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்து மற்ற மொழிகளிலும் வெளியான தரமான கதைகளாக இருந்தாலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் விக்ரம், சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை பார்த்து அசந்து விட்டாராம். மோகன்லாலின் நடிப்பும், படத்தின் கதையும் அவருக்குள் ஏறபடுத்திய தாக்கம் காரணமாக அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் கமல் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்தும் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது விக்ரமே முன்வந்திருப்பதால், அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் விக்ரம் நடிப்பதற்கு சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.