‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கடந்த 8 ஆண்டுகளாக பிபாஷாபாசை காதலித்து வந்தார். பாலிவுட்டின் நீண்ட நெடிய காதல் இதுதான். யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த 2011ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு தனிக்கட்டையாக இருந்து வந்த ஆபிரகாம் நடிகை ப்ரியா ரன்ஞ்சல்சை காதலிக்க ஆரம்பித்தார். பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்த கொண்டனர். விருது விழாக்களில் ஒன்றாக மேடையில் தோன்றினர்.
இந்த புத்தாண்டு விழாவை கொண்டாட ஜான் ஆபிரகாம், லாஸ்ஏஞ்சல்ஸ் சென்றார். அங்குதான் ப்ரியாவின் குடும்பம் வசிக்கிறது. ப்ரியா பிறந்ததும் அங்குதான். அங்கு சென்ற ஆபிரகாம் புத்தாண்டு அன்று ப்ரியாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதன் மூலம் திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜான் ஆப்ரகாமின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஷபி சவுத்ரி நேரடியாகவே திருமண வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.