அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி-2 காஞ்சனா படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். எந்தவித இமேஜூம் பார்க்காமல் அவர் நடித்திருந்த அந்த வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. இந்நிலையில், முனி-3 படமான கங்காவை தற்போது இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ். முனி படத்தில் ராஜ்கிரணை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தவர், முனி-2வில் சரத்குமாரை நடிக்க வைத்தார். ஆனால், மூன்றாம் பாகத்தில் தானே முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
இந்தநிலையில், முனி-2 காஞ்சனாவை இந்தியில் ரீமேக் செய்கிறாராம் லாரன்ஸ். அப்படத்தில் தமிழில் சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் நடிக்க சில இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால், இமேஜ் என்ற வட்டத்தில் சிக்கியிருக்கும் அவர்கள், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார்களாம்.
அதனால், மறுபடியும் அந்த வாய்ப்பு சரத்குமாரையே தேடி வந்திருக்கிறது. அதனால் மறுபடியும் திருநங்கையாக நடிக்க தன்னை தயார்படுத்தப்போகிறாராம் சரத்குமார்.