இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காஜல் அகர்வால், இப்போதும், தமிழில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் தான் இடம் பெற்றுள்ளார். விஜயுடன், 'ஜில்லா'விலும், கமல் ஹாசன் நடிக்கும் படத்திலும், காஜல் தான், ஹீரோயின். ஆனாலும், 'காஜல், ஹீரோக்களை விட, அதிகம் சம்பளம் கேட்கிறார்' என, கோடம்பாக்கத்திலிருந்து, குடு குடுப்பை ஓசை கேட்க துவங்கியதால், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அவரை ஓரம் கட்ட துவங்கியுள்ளனர். இதனால், டென்ஷனான காஜல், 'கோடம்பாக்கம் கைவிட்டாலும், ஆந்திரா என்னை கைவிடாது' என்ற நம்பிக்கையுடன், தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு வலைவீசத் துவங்கியுள்ளார். இதையடுத்து, ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தில், ஹீரோயினாகும் வாய்ப்பு, அவருக்கு கிடைத்துள்ளது.